
நட்பு - கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் | Natpu - Koperum Cholanum Pisiraandhaiyaarum
வள்ளுவமும் வரலாறும் | Valluvamum Varalaarum
Episode · 1 Play
Episode · 1 Play · 5:14 · Apr 10, 2023
About
உறையூராண்ட சோழ அரசர்களுள், கோப்பெருஞ் சோழன் ஒருவன். நண்பர் உலகிற்கு நல்ல எடுத்துக் காட்டாய் விளங்கியவன் கோப்பெருஞ் சோழன். ஒருவரோடொருவர் நட்புக் கொண்டு வாழ்வதற்கு, இருவரும் ஓர் ஊரினராதலும், ஒருவரையொருவர் பலகால் கண்டு பழகுதலும் வேண்டுவதின்று; இருவர் உள்ளமும் ஒன்றுபட்டால் அதுவே போதும் என்ற அரிய கருத்தினைக் கொண்ட     “ப ுணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்      நட்பாம் கிழமை தரும்”என்ற திருக்குறளுக்கு உதாரணமாக கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட நட்பு பற்றிய வரலாறு இது அதிகாரம்:நட்பு குறள் எண்:785
5m 14s · Apr 10, 2023
© 2023 Captivate Audio Ltd. (OG)