
Vazhvatha Savatha Lyrics
Vazhvatha Savatha by AJ Shangarjan, Deshany AJS
Song · 3:03 · Tamil
℗ 2022 Urban Records Entertainment
Vazhvatha Savatha Lyrics
வாழ்வதா சாவதா
தூரமாய் போவதா
காரணம் இன்றியே
காணலாய் போவதா
கண்களை மூடிய
கைதியாய் வாழ்கிறோம்
கண்டதும் ஓடிடும்
உறவுகள் நாமாகிறோம்
கனவுகள் கலைய
கவலைகள் நிறைய
உயிரில்லா உடல் என
உணருகின்றோம்
எம் கண்ணில் துரோகம் இல்லை
எவர் மீதும் பகையும் இல்லை
இருந்தாலும் தூரமாக
ஆகிறோம்
எல்லோரும் ஒன்றாய் வாழ
ஒன்றன் பின் ஒன்றாய் கூட
தனியாக நாங்கள் மட்டும்
வாழ்கிறோம்
வாழ்கையில் ஆயிரம்
சோகங்கள் தோன்றுமே
சோகங்கள் யாவுமே
கோபமாய் இங்கு ஆவதேன்
யாரும் இங்கு வேறு இல்லை
ஜாதி மத பேதமில்லை
ஒற்றுமையாய் நாமும் இங்கு
வாழுவோம்
நீயும் நானும் யாரோ இல்லை
தூரமாக ஆகவில்லை
ஒன்றாய் இந்த நாட்டில் என்றும்
வாழுவோம்
யாரும் இங்கு வேறு இல்லை
ஜாதி மத பேதமில்லை
ஒற்றுமையாய் நாமும் இங்கு
வாழுவோம்
நீயும் நானும் யாரோ இல்லை
தூரமாக ஆகவில்லை
ஒன்றாய் இந்த நாட்டில் என்றும்
வாழுவோம்
Writer(s): Aj Shangarjan, Amirtharupan Sajay<br>Lyrics powered by www.musixmatch.com
More from Vazhvatha Savatha
Loading
You Might Like
Loading
3m 3s · Tamil