Pachai Kili Revival Lyrics

Azhagiya Thamil Magal - Revival Series Mgr Duets  by M. S. Viswanathan , T. M. Soundararajan , P. Susheela

Song   ·  4,794 Plays  ·  4:36  ·  Tamil

© 2000 Saregama

Pachai Kili Revival Lyrics

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ

பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ

பொன்னின் நிறம் பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ
மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ

தத்தை போலத் தாவும் பாவை பாதம் நோகும் என்று
மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு

வண்ணச்சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு

கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ
நானே தரும் நாளும் வரும் ஏனிந்த அவசரமோ

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ

மெல்ல பேசும் கள்ள பார்வை ஜாதி பூவின் மென்மை
சொல்ல போகும் பாடல் நூறும் ஜாடை காட்டும் பெண்மை

முள்ளில்லாத தாளை போல தோகை மேனி என்று
அள்ளும் போது மேலும் கீழும் ஆடும் ஆசை உண்டு

அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
அந்த நேரம் நேரிலே சொர்க்கம் தோன்றுமோ
காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ

பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ

மன்னன் என்னும்
தேரில் வரும்
தேவன் மகன் நீயோ

பொன்பட்டாடை மூடிச்செல்லும் தேன்சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும் போதை என்ன சொல்ல

கை தொட்டாட காலம் நேரம் போகப் போக உண்டு
கண்பட்டாலும் காதல் வேகம் பாதிப்பாதி இன்று

பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
பள்ளிக் கூடம் போகலாம் பக்கம் ஓடி வா
கூடம்தனில் பாடம் பெறும் காலங்கள் சுவையல்லவோ

பொன்னின் நிறம்
பிள்ளை மனம்
வள்ளல் குணம் யாரோ

மன்னன் என்னும் தேரில் வரும்
தேவன் மகன் நீயோ

பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும்
தேவன் மகள் நீயோ

ஹாஹாஹாஹா
ஹோஹோஹோஹோ
லலலலலலாலா
ஹாஹாஹாஹா
ஹோஹோஹோஹோ
லலலலலலாலா

Writer(s): M.s. Viswanathan, Vaalee<br>Lyrics powered by www.musixmatch.com

4m 36s  ·  Tamil

© 2000 Saregama