Nilave Ennidam (From "Ramu") Lyrics

Gemini Ganesan - All Time Popular Songs  by P. B. Sreenivas , M. S. Viswanathan

Song   ·  181,635 Plays  ·  4:40  ·  Tamil

© 2016 Saregama

Nilave Ennidam (From "Ramu") Lyrics

பெ: நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி...
நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமன் யாரோடி...
(இசை)
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில்
நானில்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில்
நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை
நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில்
நானில்லை...
(இசை)
ஆ: கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல்
எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ...
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
(இசை)
ஆ: ஊமையின் கனவை யார் அறிவார் (2)
என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
மூடிய மேகம் கலையுமுன்னே
நீ பாட வந்தாயோ
வெண்ணிலவே...
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
(இசை)...
ஆ: அமைதி இல்லாத நேரத்திலே (2)
அந்த ஆண்டவன் என்னையே
படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்...
ஆ: நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை
நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை...
(மீகா)

Writer(s): M. S. VISWANATHAN, KANNADHASAN<br>Lyrics powered by www.musixmatch.com